போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

Update: 2022-11-05 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றியும், நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகள் குறித்தும் டி.ஐ.ஜி. பாண்டியன் கேட்டறிந்தார். மேலும் கைது செய்யக்கூடிய வழக்குகளில் தலைமறைவு எதிரிகளை உடனுக்குடன் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோவிந்தராஜ், தேவராஜ் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் காவல்துறை அரசு வாகனங்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அந்த வாகனங்களின் பராமரிப்புகள் குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்