பொத்தகாலன்விளையில் கிரிக்கெட் போட்டி

பொத்தகாலன்விளையில் கிரிக்கெட் போட்டி நடந்தது.

Update: 2022-06-08 14:16 GMT

சாத்தான்குளம்:

தென்மண்டல கத்தோலிக்க இளைஞர் இயக்கம் மற்றும் பொத்தகாலன்விளை தொன்போஸ்கோ இளைஞர் இயக்கம் இணைந்து வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்தின. பொத்தகாலன்விளையில் நடந்த இப்போட்டியில் மறை ஒன்றிய அளவில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஏற்கனவே வெற்றிபெற்ற கடகுளம், நெடுங்குளம், பார்பரம்மாள்புரம், சேதுக்குவாய்த்தான், கள்ளிகுளம், அழகப்பபுரம், ராதாபுரம் மற்றும் பொத்தகாலன்விளை ஆகிய 8 அணிகள் பங்கேற்றன. இப்போட்டிகளை பொத்தகாலன்விளை திருத்தல அதிபர் வெனி இளங்குமரன், அருள்தந்தை கிங்ஸ்லி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இப்போட்டியில் கடகுளம் பங்கு இளைஞர் அணி முதல் பரிசையும், வெற்றி கோப்பையையும் தட்டிச்சென்றது. 2-வது இடத்தை பொத்தகாலன்விளை பங்கு இளைஞர் அணியும், 3-வது இடத்தை அழகப்பபுரம் பங்கு இளைஞர் அணியும், 4-வது இடத்தை நெடுங்குளம் பங்கு இளைஞர் அணியும் பெற்றன. சிறந்த மட்டை வீச்சாளராக கடகுளம் பங்கு அணித்தலைவர் கென்னடி, சிறந்த பந்து வீச்சாளராக பொத்தகாலன்விளை பங்கு கிளின்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் வெற்றிக் கோப்பையை தூத்துக்குடி மறைமாவட்டம் தென்மண்டல பணி குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் நெல்சன்பால்ராஜ் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்