மாவட்ட கிரிக்கெட் போட்டிடாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொடங்கி வைத்தார்

தர்மபுரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தொடர் கிரிக்கெட் போட்டியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-21 18:45 GMT

கிரிக்கெட் போட்டி

தர்மபுரி அதியமான் கிரிக்கெட் கிளப் சார்பில் மாவட்ட அளவில் டாக்டர் ஏ.எம்.ஆர். கிரிக்கெட் கோப்பைக்கான தொடர் கிரிக்கெட் போட்டி தர்மபுரி மாவட்டத்தில் ஒன்றிய அளவில் உள்ள அணிகளுக்கு இடையே 15 நாட்கள் நடைபெற உள்ளது. ஒன்றிய அளவில் நடைபெறும் போட்டியில் இருந்து தேர்வாகும் அணிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்படுகிறது.

இந்த கிரிக்கெட் போட்டி தொடக்க விழா தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு செந்தில் பள்ளி நிர்வாக இயக்குனர் சக்திவேல் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், சதாசிவம், அனைத்து வணிகர் சங்க தலைவர் வைத்திலிங்கம், தொழிலதிபர்கள் துரைராஜ், ஜெயராமன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, நேரு யுவகேந்திரா மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. போட்டியை தொடங்கி வைத்து முதலில் அவர் பேட்டிங் தேர்வு செய்து விளையாடினார். பின்னர் அணி வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

1000 அணிகள் பதிவு

விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசுகையில், கோடை விடுமுறையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை மனதளவிலும், உடல் அளவிலும் நல்வழிப்படுத்தும் நோக்கத்தோடு இது போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இது போன்று கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படும். இதில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும். இந்த கிரிக்கெட் போட்டியில் 1000 அணிகள் கலந்து கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இது போன்ற போட்டிகள் மாநிலம் முழுவதும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேலுசாமி, பாரிமோகன், பா.ம.க. மாநில நிர்வாகிகள் பாடி செல்வம், முருகசாமி, சண்முகம், செந்தில், வாசு நாயுடு, கிழக்கு மாவட்டச் செயலாளர் அரசாங்கம், மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, பாலகிருஷ்ணன், சிவக்குமார், ராமகிருஷ்ணன், செல்வகுமார், இமயவர்மன், மதியழகன், நகர நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சவுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்