சிவில் என்ஜினீயர்களுக்கான கிரிக்கெட் போட்டி
நெல்லையில் சிவில் என்ஜினீயர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் சிவில் என்ஜினீயர்களுக்கான இந்தியா சிமெண்ட்ஸ் புரோ லீக் (ஐ.சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி முதன் முறையாக நெல்லை சங்கர்நகர் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் 2 நாட்கள் நடந்தது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன. இந்தியா சிமெண்ட்ஸ் ஆலை பொறுப்பாளர் சரவணமுத்து, சிவில் என்ஜினீயர் கூட்டமைப்பு தலைவர் ரவி ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
இறுதியில் தென்காசி சூப்பர் கிங்ஸ் அணியினர் வெற்றி பெற்று சென்னையில் நடக்கும் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். சிறப்பாக விளையாடிய தென்காசி சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சந்தோஷ், சேது மாதவன் ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்தியா சிமெண்ட்ஸ் தமிழ்நாடு மார்க்கெட்டிங் துறை தலைவர் இனியவன், விற்பனை பிரிவு தலைவர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.