திண்டுக்கல்லில் கிரிக்கெட் சங்க அலுவலகம் திறப்பு
திண்டுக்கல்லில் கிரிக்கெட் சங்க அலுவலகம் திறக்கப்பட்டது.
திண்டுக்கல் எம்.வி.எம்.நகரில், திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகம் கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஆர்.எஸ்.கே.ரகுராம் தலைமை தாங்கினார். செயலாளர் அமர்நாத் முன்னிலை வகித்தார்.
இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஐ.பழனி கலந்துகொண்டு, புதிய அலுவலக கட்டிடத்தை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணை செயலாளர் ஆர்.என்.பாபா, திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க உதவி தலைவர் வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.