மத்திய அரசின் வேளாண் கடன் சிறப்பு முகாம்

வருகிற 27-ந் தேதி மத்திய அரசின் வேளாண் கடன் சிறப்பு முகாம் நடக்கிறது

Update: 2022-12-22 21:02 GMT

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

வேளாண் உள் கட்டமைப்புகளை மேம்படுத்த, மத்திய அரசு வேளாண் உட்கட்டமைப்பு நிதியை உருவாக்கி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பிணையற்ற குறைந்த வட்டியிலான கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையில் கடனுக்கு 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் வட்டி குறைப்பு வழங்கப்படுகிறது. இதற்கான சிறப்பு முகாம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தி்ல நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்