மாதிரி வாக்குச்சாவடி அமைத்து தேர்தல் குறித்து விழிப்புணர்வு
நாட்டறம்பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி அமைத்து தேர்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாட்டறம்பள்ளி பகுதியில் சிறப்பு முறை திருத்தம், தேசிய வாக்காளர் தினம் மற்றும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக விழிப்புனர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி கலந்துகொண்டு பள்ளி மாணவர்களிடையே எதிர்கால வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பானுமதி, நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர்கள் அன்னலட்சுமி, வனிதா, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.