சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன
திசையன்விளை, விக்கிரமசிங்கபுரத்தில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன.
திசையன்விளை:
திசையன்விளை பஜாரில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த 29 மாடுகளை பேரூராட்சி ஊழியர்கள் பிடித்தனர். தொடர்ந்து மாடுகளின் உரிமையாளர்கள் பிடிபட்ட மாடுகளுக்கு தலா ரூ.2,500-ம், கன்றுகுட்டிகளுக்கு தலா ரூ.1,500-ம் அபராதம் செலுத்தி, அவற்றை மீட்டு சென்றனர்.
இதேபோன்று விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரிந்த ஆடு, மாடுகளை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி பணியாளர்கள் பிடித்து சென்றனர். இதனை தேடி வரும் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் அபராதம் விதிக்கப்படும் எனவும், உரிமையாளர்கள் தேடி வராத கால்நடைகளை கோசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.