பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்கு குவிந்த மாடுகள்
பொய்கை வாரச்சந்தையில் விற்பனைக்கு ஏராளமான மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
பொய்கை மாட்டு சந்தை செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான கால்நடைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர சண்டை சேவல்கள், கோழிகள், புறாக்களும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஆயிரத்திற்கும்மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு வந்தது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், மாட்டு சந்தை முழுவதும் குளம்போல் மழைநீர் ஆங்காங்கே தேங்கி சந்தை வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. கால்நடைகளை முழங்கால் சேற்றில் நிற்க வைத்து விற்பனை செய்தனர். சேறும் சகதியுமான இடங்களிலேயே காய்கறி விற்பனை நடந்தது.
எனவே மாட்டு சந்தையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என வியாபாரிகள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.