தண்ணீர் குடிக்க சென்ற 3 மாடுகள் செத்தன
மாரண்டஅள்ளி அருகே வனப்பகுதியில் தண்ணீர் குடிக்க சென்ற 3 மாடுகள் செத்தன.
மாரண்டஅள்ளி:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே செம்மனஅள்ளி காந்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் வளர்த்து வரும் நாட்டு மாடுகளை உறவினர்கள் மூலமாக அங்குள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். சம்பவத்தன்று அவர்கள் அங்குள்ள சென்றாய பெருமாள் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் 3 மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அங்குள்ள ஓடையில் தண்ணீர் குடிக்க சென்ற 3 மாடுகள் திடீரென செத்தன. இதுகுறித்து மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.