ஜெயின் கோசாலாவில் மாட்டுப்பொங்கல் விழா

வேலூர் ஜெயின் கோசாலாவில் மாட்டுப்பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2023-01-16 16:57 GMT

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள ஜெயின் கோசாலாவில் நேற்று மாட்டுப்பொங்கல் விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் பொங்கல் வைத்து மாடுகளுக்கு வழங்கி கொண்டாடினர். மேலும் மாடுகளுக்கு பூஜைகள் செய்து, ஆரத்தி காண்பித்தனர். அதைத்தொடர்ந்து மாடுகளுக்கு பழங்கள் உள்ளிட்ட தீவனங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் ருக்ஜிராஜேஷ், விமல்சந்த்முதா, தர்மராஜ் உள்பட ஜெயின் சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்