தெப்பத்திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

தெப்பத்திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

Update: 2022-06-15 17:39 GMT

காளையார்கோவில், 

காளையார்கோவில் சவுந்திரநாயகி அம்மன், சோமேஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

காளையார்கோவில் சவுந்திரநாயகி அம்மன், சோமேஸ்வரர் கோவில் வைகாசி விசாக தெப்பத்திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. காளையார்கோவில் நாலுகால் மண்டபம்-தொண்டி சாலையில் இந்த பந்தயம் நடந்தது. இதில் மொத்தம் 19 வண்டிகள் கலந்துகொண்டன.

அதன்படி பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்துகொண்டன.

பரிசுகள்

இந்த பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை அவனியாபுரம் பசும்பொன் வண்டியும், 2-வது பரிசை பூவந்தி தியானபாண்டியன் வண்டியும், 3-வது பரிசை நொடோடை சாயாஸ்யுவர்ஸ் மற்றும் வல்லாளப்பட்டி கற்காத்தாள் வண்டியும் பெற்றது.

இதையடுத்து சின்னமாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டன. இந்த போட்டியில் முதல் பரிசை தேனி மாவட்டம் பாலார்பட்டி மாயா வண்டியும், 2-வது பரிசை சிவகங்கை அருண் ஸ்டுடியோ வண்டியும், 3-வது பரிசை கணக்கன்பட்டி சற்குரு வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்