மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி அம்பையில் மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடந்தது.

Update: 2022-06-05 20:01 GMT

அம்பை:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி, அம்பையில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடந்தது. நகராட்சி தலைவர் பிரபாகரன் பாண்டியன் தலைமை தாங்கினார். யூனியன் தலைவர் பரணி சேகர், விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் முத்து பாண்டியன் என்ற பிரபு, மணிமுத்தாறு நகர செயலாளர் முத்து கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பந்தயங்களை தொடங்கி வைத்தார். சிறிய மாட்டு வண்டி பந்தயம் 5 கிலோ மீட்டர் தூரமும், பெரிய மாட்டு வண்டி பந்தயம் 7 கிலோ மீட்டர் தூரமும் நடைபெற்றது. அம்பை ராணி பள்ளி அருகில் இருந்து காக்கநல்லூர் விலக்கு வரையிலும் பந்தய தூரம் அமைக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன், கல்லிடைக்குறிச்சி நகர செயலாளர் இசக்கி பாண்டியன், சஞ்சய் செல்வம், செல்வசூடாமணி, ஆதிமூலம், பிரம்மதேசம் பஞ்சாயத்து தலைவர் ராம் சங்கர், பாப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் ஆனைகுட்டி பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்