சென்னை: மாடு முட்டியதில் முதியவர் உயிரிழப்பு

மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Update: 2023-10-28 01:43 GMT

சென்னை,

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஆவடியை அடுத்த பட்டாபிரான் சோராஞ்சேரி பகுதியில் வீட்டு வாசலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த பெண்ணை பசுமாடு முட்டியது.

இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் ஓடி தப்பினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இதனிடையே, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே கடந்த 18-ந்தேதி முதியவர் சுந்தரத்தை மாடு முட்டியது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த முதியவர் சுந்தரம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக முதியவர் சுந்தரத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மாடு முட்டியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்