மாடு, குதிரை ரேக்ளா பந்தயம்

திருக்கடையூரில் மாடு, குதிரை ரேக்ளா பந்தயம் நடந்தது

Update: 2023-01-17 18:45 GMT

திருக்கடையூர்:

திருக்கடையூரில் மாடு, குதிரை ரேக்ளா பந்தயம் நடந்தது

ரேக்ளா பந்தயம்

திருக்கடையூரில் காணும் பொங்கலையொட்டி நேற்று மாடு, குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார், செம்பனார்கோவில்ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி குமரவேல், தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். நிவேதா முருகன் எம்.எல்,ஏ. ரேக்ளா பந்தயத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து திருக்கடையூரில் உள்ள தில்லையாடி நுழைவு வாயில் அருகில் இருந்து போட்டி அனந்தமங்களம் மற்றும் தரங்கம்பாடி வரை நடந்தது. இதில் சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை ஆகியவைகள் 6 வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்தது.

போலீஸ் பாதுகாப்பு

இதில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை பார்த்தனர். அசம்பா விதங்கள் ஏற்படாமல் இருக்க சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு. லாமேக் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை திருக்கடையூர், டி. மணல்மேடு, பிள்ளைபெருமாள்நல்லூர், கிள்ளியூர், தில்லையாடி, காழியப்ப நல்லூர், மாணிக்கபங்கு, ஆகிய 7 ஊராட்சி தலைவர்கள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர், பொதுமக்கள் செய்திருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்