புதன் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது

Update: 2023-03-28 18:45 GMT

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள புதன்சந்தைக்கு நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் நேற்று மாடுகள் வரத்து குறைவாக இருந்தது. இதனால் கடந்த வாரத்தை விட மாடுகளின் விலை சற்று அதிகரித்தது. அதன்படி கடந்த வாரம் ரூ.15 ஆயிரத்துக்கு விற்ற பசு, இந்த வாரம் ரூ.15 ஆயிரத்து 500-க்கும், ரூ.15 ஆயிரத்துக்கு விற்ற எருமை, ரூ.25 ஆயிரத்து 500-க்கும், ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற கன்று, ரூ.10 ஆயிரத்து 500-க்கும் விற்பனையாகின.

மேலும் செய்திகள்