நாகர்கோவிலில் கோர்ட்டு ஊழியர்கள் வாயிற்கூட்டம்

நாகர்கோவிலில் கோர்ட்டு ஊழியர்கள் சார்பில் வாயிற்கூட்டம் நடந்தது.

Update: 2022-08-11 19:20 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் கோர்ட்டு ஊழியர்கள் சார்பில் வாயிற்கூட்டம் நடந்தது.

வாயிற்கூட்டம்

தமிழகத்தில் உள்ள கோர்ட்டுகளில் 1,412 காலி பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்புவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் உள்ள காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும், தற்காலிகமாக 12 வருட காலமாக பணியாற்றும் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கோர்ட்டு ஊழியர்கள் வாயிற் கூட்டம் நேற்று மாலை நடந்தது.

அதேபோல் நாகர்கோவில் கோர்ட்டு முன்பும் கோர்ட்டு ஊழியர்கள் வாயிற் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நீதித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில பொருளாளர் சிபு கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் யோகேஸ்வரன், நீதித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பெஞ்சமின் ஜோஸ், முன்னாள் மாவட்ட செயலாளர் மங்கை மணவாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்