2 பேர் காங்கயம் கோர்ட்டில் சரண்...!!

முத்தூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 பேர் காங்கயம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர்.

Update: 2023-06-27 15:38 GMT

தொழிலாளி ெகாலை

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே வள்ளியரச்சல் ஊராட்சிக்குட்பட்ட சின்னக்கவுண்டன் வலசை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 43). தொழிலாளியான இவர் கடந்த ஜூன் 8-ந் தேதி வரட்டுகரை டாஸ்மாக் கடை அருகில் கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை தொடர்ந்து வெள்ளகோவில் போலீசார் மோகனசுந்தரத்தின் பிணத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிேரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மோகனசுந்தரம் தனது வீட்டின் அருகில் உள்ள சக்திவேல் என்பவரது குடும்பத்தினருடன் இடப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்ததும், இந்த நிலையில் மோகனசுந்தரம் சக்திவேல் வீட்டுக்குச் சென்ற குடிநீர் குழாயை கத்தியால் அறுத்துவிட்டதும் தெரியவந்தது.

கோர்ட்டில் சரண்

இதனால் சக்திவேல் மகன் அன்புகுமார் மாரிமுத்து அவரது உறவினர் பிரவீன்குமார் மற்றும் 2 பேர் வந்து மோகனசுந்தரத்தை ஒரு காரில் ஏற்றி முத்தூருக்கு கொண்டு சென்று ஒரு பேட்டரி கடையில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்த மோகனசுந்தரத்தின் உடலை அன்புகுமார் மாரிமுத்து மற்றும் 3 பேர் வரட்டுகரை டாஸ்மாக் கடை அருகில் உள்ள கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அன்புகுமார் மாரிமுத்துவை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக முத்தூர், வரட்டுகரை பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (33) என்பவர் கடந்த 23-ந் தேதி காங்கயம் கோர்ட்டில் சரணடைந்த நிலையில், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குப்புராஜ் (44), சுரேஷ் (37) ஆகிய 2 பேர் நேற்று காங்கயம் கோர்ட்டில் சரணடைந்தனர். இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 2 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்