சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஐகோர்ட்டு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

ஆந்திரா மாநில சுங்கச்சாவடியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஐகோர்ட்டு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-26 14:54 GMT

சென்னை:

ஆந்திரா மாநில சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலித்ததை தட்டிக்கேட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் வக்கீல் பிரிவு சார்பில் சென்னை ஐகோர்ட்டு முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் வக்கீல் பிரிவு மாநில செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சேவியல் பெலிக்ஸ் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வக்கீல் தடா சந்திரசேகர், வக்கீல் ராவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழக மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், காயம் அடைந்த தமிழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர்.

முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய வக்கீல்கள் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் வக்கீல் சத்தியசீலன் தலைமையில் ஐகோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்