கைதான 11 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கைதான 11 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Update: 2022-07-29 13:51 GMT

கூடலூர்

கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே மச்சிக்கொல்லி பகுதியில் யானை தந்தங்கள், புலி நகங்களை பதுக்கி வைத்து விற்க முயன்ற தேவர்சோலை பகுதியை சேர்ந்த அப்சல் (வயது 22), ஈஸ்வரன் (54), சவுக்கத் (45), பாபு (50), வினோத்குமார் (19), சமீர் (33), தெப்பக்காடு மாதன் (46), செருமுள்ளி அனீஸ் (36), ஆர்.பாபு (29), கூடலூர் மார்தோமா நகர் விஜய் (20), சுரேந்திரன் (19) ஆகிய 11 பேரை கூடலூர் வனத்துறையினர் கைது செய்துனர்.

இந்த நிலையில் அவர்களை வனத்துறையினர் கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது கைது செய்யப்பட்ட 11 பேருக்கும், கூடுதலாக 15 நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் என்றும், அடுத்த மாதம்(ஆகஸ்டு) 12-ந் தேதி மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் குற்றவியல் நீதிபதி சசின் குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் அவர்கள் கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்