தேசிய மக்கள் நீதிமன்றம்

தர்மபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

Update: 2022-11-04 18:45 GMT

தர்மபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவர் மணிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய மக்கள் நீதிமன்றம்

மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக வருகிற 12-ந்தேதி தர்மபுரியில் தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதுபோன்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 4 தாலுகா நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

தேசிய மக்கள் நீதிமன்ற முன் அமர்வுகள் வருகிற 11-ந்தேதி வரை தினமும் மதியம் 2 மணிக்கு மேல் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, சமரசம் செய்து கொள்ள கூடிய வழக்குகளை முடித்து கொள்ளலாம்.

குற்ற வழக்குகள்

இதைத்தொடர்ந்து வருகிற 12-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் லோக் அதாலத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், உரிமையியல் வழக்குகள், குடும்ப பிரச்சினை வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், சமரச தீர்வு காணக்கூடிய குற்ற வழக்குகளுக்கு சமரச முறையில் அன்றைய தினமே தீர்வு காணப்படும்.

பொதுமக்கள் இந்த வாய்ப்ைப பயன்படுத்தி, முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, நீதிமன்றங்களில் ஆஜராகி வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்