தர்மபுரியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

Update: 2022-10-14 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் வக்கீல் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் பாலு தலைமை தாங்கினார். செயலாளர் தர்மன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். தர்மபுரியில் வக்கீல் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரியில் உள்ள கோர்ட்டுகளில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும். வக்கீல்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்மபுரியில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.

மேலும் செய்திகள்