நாமக்கல் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

Update: 2022-09-20 18:45 GMT

திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு வக்கீல் ஜமிலா பானுவை அவரது அலுவலகத்தில் வைத்து கொல்ல முயன்றதை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கூட்டுக்குழு ஆகியவை அழைப்பு விடுத்து இருந்தன.

அதன்படி நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் பரமத்தி என மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்