தம்பதி கழுத்தை அறுத்து கொலை: போலீசார் தீவிர விசாரணை

கோவில்பட்டியில் தம்பதி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-10-30 22:29 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள பெருமாள் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 41) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பரணிசெல்வி (39). இவர் லாயல்மில் காலனியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர்களுக்கு மனோஜ் (18) என்ற மகனும், உமா (14) என்ற மகளும் உள்ளனர்.

பிணமாக கிடந்தனர்

இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டில் ராஜபாண்டி, பரணிசெல்வி ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை

மேலும் சம்பவ இடத்தை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

கணவன்-மனைவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததால் அவர்களை யாரேனும் மர்ம நபர்கள் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். புதிய வீடு கட்டியதில் ஏற்பட்ட கடன் பிரச்சினை காரணமாக ராஜபாண்டி தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் ெதரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்