தம்பதிக்கு ஆயுள் தண்டனை
முன் விரோதம் காரணமாக முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
முன் விரோதம் காரணமாக முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
முதியவர் கொலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழியை சேர்ந்தவர் ராமன் (வயது 75). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த சண்முகநாதன் (43) என்பவருக்கும் இடம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் சண்முகநாதன், அவருடைய மனைவி பஞ்சவர்ணம் (40) ஆகிய 2 பேரும் சேர்த்து ராமனை இரும்பு கம்பியால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
தம்பதிக்கு ஆயுள் தண்டனை
இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகநாதன், பஞ்சவர்ணம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட வன்கொடுமை தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து சண்முகநாதன் மற்றும் அவருடைய மனைவி பஞ்சவர்ணம் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.