லாரி மோதி தம்பதி பலி

சூலூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி மோதியதில் தம்பதி பலியானார்கள். மகன் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-06-25 23:15 GMT

சூலூர்

சூலூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி மோதியதில் தம்பதி பலியானார்கள். மகன் கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள புளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 66), இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (60). இவர்களுடைய மகன் கவுதம் (31). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஜெகநாதன் கோவை சிங்கநல்லூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு நேற்று காலை தனது குடும்பத்துடன் புறப்பட்டார். ஒரு மோட்டார் சைக்கிளில் ஜெகநாதனும், அவருடை மனைவி பாக்கியலட்சமியும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் கவுதமும் புறப்பட்டனர்.

இவர்கள் திருச்சி-கோவை சாலையில் சிந்தாமணிபுதூர் அருகே வந்து வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த லாரி ஜெகநாதன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

தம்பதி பலி

இந்த விபத்தில் ஜெகநாதன், பாக்கியலட்சுமி ஆகியோர் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தன் கண்முன்னே தாய்-தந்தையை இழந்த கவுதம் கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சூலூர் போலீசார் ஜெகநாதன், பாக்கியலட்சமி ஆகியோரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கேரளமாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் முகமது சாதிக் என்பவரிடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்