லாரி மோதி தம்பதி பலி

குஜிலியம்பாறை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தம்பதி பலியாகினர்.

Update: 2023-06-13 16:41 GMT

மோட்டார் சைக்கிளில் தம்பதி

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி முருகாயி (45). நேற்று இவர்கள் 2 பேரும், சொந்த வேலை காரணமாக பாளையத்துக்கு சென்றனர்.

பின்னர் இவர்கள் இரவில், கம்பிளியம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். பாளையம்-அரவக்குறிச்சி சாலையில், குஜிலியம்பாறை அருகே மேட்டுக்களத்தூர் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.

லாரி மோதி பலி

அப்போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நாகராஜ், முருகாயி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கணவன்-மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சத்திரப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் கணேசன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தம்பதி பலியான சம்பவம் குஜிலியம்பாறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்