பெண்ணிடம் 40 பவுன் நகை; ரூ.1¼ லட்சம் மோசடி

ஒரத்தநாடு அருகே பெண்ணிடம் 40 பவுன் நகை மற்றும் ரூ.1¼ லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-06-06 18:31 GMT

ஒரத்தநாடு:-

ஒரத்தநாடு அருகே பெண்ணிடம் 40 பவுன் நகை மற்றும் ரூ.1¼ லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஐஸ்கிரீம் கம்பெனி

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மனைவி பிருந்தா (வயது40). இவர் ஒரத்தநாட்டை அடுத்த தென்னமநாடு பைபாஸ் சாலை அருகே சொந்தமாக ஐஸ்கிரீம் கம்பெனி நடத்தி வருகிறார். இவரும், திருவாரூர் மாவட்டம் எடமேலையூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி பிரதிமா (40) என்பவரும் மன்னார்குடியில் உள்ள பள்ளியில் படித்ததில் இருந்து தோழிகளாக நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் பிருந்தா தனது தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக தனது மகளை வைத்து விளம்பர படம் எடுக்க பணம் தேவைப்படுகிறது என பிரதிமாவிடம் கூறியுள்ளார்.

வழக்குப்பதிவு

இதையடுத்து பிரதிமா கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு தனது 40 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை பிருந்தாவிடம் கொடுத்தார். ஆனால் பிருந்தா நகை-பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த பிரதிமா, ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் பிருந்தா, அவருடைய கணவர் ரவிக்குமார் ஆகிய 2 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்