கஞ்சா விற்ற தம்பதி கைது

மதுரையில் கஞ்சா விற்ற தம்பதி கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-24 19:46 GMT

மதுரை, 

மதுரை மதிச்சியம் போலீசார் மூங்கில் கடை தெருவில் திடீரென்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதி மீது சந்தேகப்பட்டு அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அதில் சிந்தாமணி சாமநத்தம் கிழக்கு தெருவை சேர்ந்த வேடழகன் (வயது 32), பரமேஸ்வரி (30) என்பதும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒருகிலோ 200 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்