66 பேரிடம் ரூ.1 கோடியே 85 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது

கூடுதல் வட்டி தருவதாக கூறி 66 பேரிடம் ரூ.1 கோடியே 85 லட்சம் வசூலித்து மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-25 16:23 GMT

கூடுதல் வட்டி தருவதாக கூறி 66 பேரிடம் ரூ.1 கோடியே 85 லட்சம் வசூலித்து மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.

தனியார் நிதி நிறுவனம்

நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே குச்சிபாளையத் தை சேர்ந்த விவசாயி கே.சபரிநாதன் (வயது35) கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதா வது:-

ஆகாஷ் சுருதி ஸ்பைஸ் பிரைவேட் நிறுவன உரிமையாளர் துரைராஜ்(41), அவருடைய மனைவி சாரதா(35) ஆகியோர் தங்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 8 முதல் 12 சதவீத வட்டி தருவதாக தெரிவித்தனர்.

மேலும் தேயிலை தோட்டங்களில் பயன்படுத்தப்படும் எந்திரங்களை குத்தகைக்கு எடுத்து பொதுமக்களுக்கு உணவு பொருட்க ளை விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.

ஒரு முதலீட்டாளர் ரூ.1 லட்சம் செலுத்தினால், நிறுவனம் 24 மாதங்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் திரும்ப கொடுக்கும் என்றும், 2 ஆண்டுகளுக்கு பிறகு முதலீடு செய்த தொகையில் 50 சதவீதம் முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தரப்படும் என்றும் அறிவித்தனர்.

தம்பதி கைது

இதை நம்பி அந்த நிறுவனத்தில் ரூ.5 லட்சம் செலுத்தினேன். ஊக்கத்தொகை என்ற பெயரில் ரூ.2 லட்சம் தந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கு வதை நிறுத்தி விட்டனர். இதையடுத்து அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

அதன் பேரில்விசாரணை நடத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாத்தல் சட்டப் பிரிவு 5, மோசடி உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீலகிரி மாவட்டம் மேல்கூடலூர் கே.கே.நகரை சேர்ந்த எஸ்.துரைராஜ், அவருடைய மனைவி சாரதா ஆகியோரை கைது செய்தனர்.

ரூ.1 கோடியே 85 லட்சம்

விசாரணையில், அவர்கள், சென்னை, பெங்களூரு, சேலம், கேரளா, ஐதராபாத், மைசூரு, ஓசூர், ஊட்டி, கோவை உள்ளிட்ட இடங்களில் அந்த நிறுவனத்தின் கிளைகள் மூலம் 66 முதலீட்டாளர்களிடம் ரூ.1 கோடியே 85 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்