நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

பாவூர்சத்திரத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது.

Update: 2022-11-29 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் உள்ள த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூரில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. முகாமின் ஒரு பகுதியாக கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

பாவூர்சத்திரம் அரசு கால்நடை டாக்டர் கிருஷ்ணமணி, கால்நடை ஆய்வாளர் சுப்பிரமணியன், முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் அ.பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்