புன்னம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் ெதாடக்க விழா புன்னம் பசுபதிபாளையம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவக்குமார் வரவேற்று பேசினார். அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கதிர்செல்வன் தலைமை தாங்கினார். முகாமில் போக்குவரத்து விதிகளை பயன்படுத்துவதில் மாணவர்கள் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெறும் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் கோவில், பள்ளி வளாகம், தூய்மை பணி, மரக்கன்று நடுதல், சுற்றுசூழல் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, காலை மற்றும் மாலை நேரங்களில் மனநல ஆலோசனை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு, தியானம், யோகா மற்றும் மனவளக்கலை பயிற்சிகள், ரத்தானம், கண்தானம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் குறித்த நிகழ்ச்சிகள் மாணவ-மாணவிகள் மூலம் நடைபெற உள்ளன.