நாட்டு வெடிகுண்டு வீச்சு: மேலும் ஒருவர் மீது வழக்கு

நாட்டு வெடிகுண்டு வீசியது தொடர்பாக மேலும் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-07 18:45 GMT

தியாகதுருகம்,

தியாகதுருகம் பாப்பான்குளம் தெருவில் உள்ள சிமெண்டு சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசியதாக தியாகதுருகம் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் மகன் ருத்தீஷ் (வயது 25), கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (24), தியாகதுருகம் சந்தைமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) ஆகிய 3 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் மற்றும் மணிகண்டனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ருத்தீசை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் நாட்டு வெடிகுண்டு வீசியது தொடர்பாக தியாகதுருகம் திருக்கோவிலூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அம்ரிஷ் (23) என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்