சிவகாசியில் இன்று வாக்கு எண்ணிக்கை
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 25-வது வார்டு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று யூனியன் அலுவலகத்தில் எண்ணப்படுகிறது.
சிவகாசி,
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 25-வது வார்டு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று யூனியன் அலுவலகத்தில் எண்ணப்படுகிறது.
இடைத்தேர்தல்
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 25-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவி, பள்ளப்பட்டி பஞ்சாயத்து 10-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடந்தது.
இதில் தி.மு.க. சார்பில் சின்னதம்பி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஈஸ்வரன் மற்றும் சுயேச்சைகள் அசோக்குமார், கணேசன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதேபோல் பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட 10-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் ஆறுமுகச்சாமி, விஸ்வநாதன், சக்திவேல், முத்துராஜ், கணேசன் ஆகியோர் போட்டியிட்டனர், இந்த இடைத்தேர்தலுக்காக சிவகாசியில் 11 இடங்களில் வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டது. இதில் 55 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
எண்ணிக்கை
வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குபெட்டிகள் சிவகாசி யூனியன் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை சிவகாசி யூனியன் அலுவலகத்தில் உள்ள முதல் மாடியில் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் நடத்தும் அதிகாரி உமாசங்கர், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சீனிவாசன், ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.