சரமாரியான தாக்குதலில் கள்ளக்காதலன் கொலை; இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
ள்ளிரவில் வீடு தேடி வந்து பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த கள்ளக்காதலன் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
நள்ளிரவில் வீடு தேடி வந்து பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த கள்ளக்காதலன் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பட்டாசு ஆலை டிரைவர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள படந்தால் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் கருப்பசாமி (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் டிரைவராக இருந்தார்.
இதே பட்டாசு ஆலையில் சிவகாசி விசுவநத்தம் பகுதியை சேர்ந்த பாண்டிசெல்வம் என்பவருடைய மனைவி ரூபாவும் (22) வேலை பார்த்து வந்தார். பாண்டிசெல்வம் சிவகாசியில் ஒரு பூக்கடையில் வேலை செய்தார். இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் டிரைவர் கருப்பசாமிக்கும், ரூபாவுக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.
அடித்துக்கொலை
இந்த நிலையில் ரூபாவின் கணவர் பாண்டிசெல்வம், ஆமத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளார். நள்ளிரவில் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் ரூபாவும், கருப்பசாமியும் தனிமையில் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டிசெல்வம் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து கருப்பசாமி, ரூபா ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது. காயம் அடைந்த ரூபாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்குபதிவு
இந்த சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த கருப்பசாமி உடலை பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிைடயே அங்கிருந்து தப்பி ஓடிய பாண்டிசெல்வத்தை சித்துராஜபுரம் பகுதியில் போலீசார் கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தி உள்ளது.
போலீஸ் அதிகாரி
கொலை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பாண்டிசெல்வமும், ரூபாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். பட்டப்படிப்பு முடித்த ரூபா கடந்த 2 மாதத்துக்கு முன்னர்தான் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.. இதில் கருப்பசாமிக்கும், ரூபாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கருப்பசாமி விசுவநத்தம் வந்துள்ளார். பின்னர் அவர் பாண்டிசெல்வம் வீட்டில் இரவில் தங்கி, அவர் மனைவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்..
திடீரென வீட்டிக்கு வந்த பாண்டிசெல்வத்துக்கும், கருப்பசாமிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாண்டிசெல்வம் கட்டையாலும், செங்கலை கொண்டும் கருப்பசாமியை தாக்கியதில், பலத்த காயம் அடைந்த அவர் இறந்துவிட்டார்.. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.