கோபி அம்மா உணவகத்தில் கொடுக்கப்பட்ட 10 ரூபாய் கள்ளநோட்டு; நூலில் கட்டி தொங்கவிட்டுள்ளனர்

கோபி அம்மா உணவகத்தில் கொடுக்கப்பட்ட 10 ரூபாய் கள்ளநோட்டு; நூலில் கட்டி தொங்கவிட்டுள்ளனர்

Update: 2023-08-06 21:55 GMT

கடத்தூர்

கோபியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரூ.10 கொடுத்து தோசை, இட்லி, பொங்கல் ஆகிய உணவு வகைகளை பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் தினமும் விற்பனையாகும் பணத்தை கோபி நகராட்சியில் செலுத்தி வருகின்றனர்.

அங்குள்ள பணம் எண்ணும் எந்்திரத்தில் சோதனை செய்தபோது யாரோ ஒருவர் கொடுத்ததில் 10 ரூபாய் கள்ளநோட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள், கள்ள நோட்டை திருப்பி அம்மா உணவக ஊழியர்களிடமே கொடுத்துவிட்டனர். இதையடுத்து அம்மா உணவக பணியாளர்கள் அந்த கள்ள நோட்டை நூலில் கட்டி, அதில் இது கள்ள நோட்டு என்று எழுதியும் வைத்துள்ளனர்.

இதுகுறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டபோது, 'சாப்பிட வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவே இவ்வாறு எழுதி வைத்துள்ளோம்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்