கள்ளச்சாராயம் விவகாரம்: பாஜக இன்று ஆர்ப்பாட்டம்
சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,
விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்ததை கண்டித்து பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக பாஜக மாநில மகளிர் அணி சார்பில் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேலும், சென்னையில் ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.