கோர்ட்டு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

கோர்ட்டு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் டி.ஐ.ஜி. தலைமையில் நடந்தது.

Update: 2023-09-29 18:23 GMT

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நீதிமன்ற பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நீதிமன்ற சம்பந்தப்பட்ட பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் அவர்களின் குறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி. தெரிவித்தார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கவுதமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்