கிராம உதவியாளர் பணி தேர்வையொட்டி தேர்வு மைய அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

கிராம உதவியாளர் பணி தேர்வையொட்டி தேர்வு மைய அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-12-03 17:47 GMT

அரக்கோணம்

கிராம உதவியாளர் பணி தேர்வையொட்டி தேர்வு மைய அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

அரக்கோணம் தாலுகாவில் காலியாக உள்ள 9 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 1394 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான எழுத்து தேர்வு அரக்கோணத்தில் எஸ்.எம்.எஸ். விமல் மெட்ரிக் பள்ளி மற்றும் டாக்டர் கெங்குசாமி மெட்ரிக் பள்ளி மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டர் பாத்திமா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்