நெல்லியாளம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

நெல்லியாளம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-31 18:45 GMT

பந்தலூர்

நெல்லியாளம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நகராட்சி கூட்டம்

பந்தலூர் நெல்லியாளம் நகராட்சியின் கூட்டம் நடைபெற்றது. தலைவர் சிவகாமி, பொறியாளர் வசந்தன், துணைதலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆலன் முரளிதரன், சி.பி ரமேஸ், புவனேஸ்வரன் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில் 11 தற்காலிக பணியாளர்களுக்கு பணி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் கடந்த 2 மாதங்களாக தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்படட அவர்கள் சம்பளம்வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதே கோரிக்கையை தலைவரும் துணைதலைவரும் விடுத்தனர்.

முரண்பாடான தீர்மானம்

இதற்கு பதில் அளித்து நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி பேசும்போது கூறியதாவது:- நகராட்சி விதிகளுக்கு முரண்பாடாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தும் அதிகாரம் மன்றத்திற்கு இல்லை. நகராட்சியின் விதிகளுக்குட்பட்ட தீர்மானங்கள் மட்டும் ஏற்கப்படும். இந்த பிரச்சினை தொடர்பாக அரசுக்கும் நகராட்சிகளின ்ஆணையாருக்கும் கோப்புகள் அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மேலும் நகராட்சி பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டி வரிவசூல் செய்கின்றனர். வரிசெலுத்தாத கடைகளை சீல் வைத்து மூடுகின்றனர் என்று கவுன்சிலர்கள் கூறினர்.

வெளிநடப்பு

இதற்கு ஆணையாளர் மகேஸ்வரி அணைவருக்கும் முன்கூட்டியே நோட்டீசுகள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கபடுகிறது என்றார். கவுண்சிலர்கள் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றபடும் தீர்மானங்களுக்கும், எங்களுக்கும் அதிகாரம் இல்லையா என்று கூறி கவுன்சிலர்கள் திடீரென கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து அதிகாரிகள் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்