கடையால் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கடையால் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்

Update: 2023-07-06 18:48 GMT

அருமனை, 

கடையால் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

கடையால் பேரூராட்சியில் முந்தைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை கேட்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். ஆனாலும், தீர்மான நகல் கொடுக்கப்படவில்லை.

இதையடுத்து நேற்று காலையில் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்த 3 கவுன்சிலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணியளவில் செயல் அலுவலர் அலுவலகத்துக்கு வந்து தீர்மான நகலை போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்