டெண்டர் விடுவதில் முறைகேடு ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் டெண்டரர் விடுவதில் முறைகேடு நடந்துள்ளதாக ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

Update: 2022-11-16 11:18 GMT

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் டெண்டரர் விடுவதில் முறைகேடு நடந்துள்ளதாக ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

கீழ்பென்னாத்தூர் ஒன்றிய குழுக்கூட்டம் அதன் தலைவர்அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் வாசுகிஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் சாந்திகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். க்ஆணையாளர் அருணாச்சலம் வரவேற்றார். உதவியாளர் வடிவேல் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், அனுராதாசுகுமார், குப்புசாமி, ராஜேந்திரன் ஆகியோர் பேசியதாவது:-

நீலந்தாங்கல் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பெயிண்டிங் பணிகள் மட்டுமே நிலுவையில் இருந்த நிலையில் தகவல் தெரிவிக்காமலேயே திறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளியின் சுற்றுச்சுவர் 3 அடி தூரத்தில் பள்ளி வளாகத்திற்கு உள்ளேதான்கட்டப்பட்டுள்ளது. அதனை இடிப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகவல் தெரிவிக்காமல் இடித்ததற்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை.

தாலுகா அலுவலகத்திற்கு செல்வதற்கான வழியினை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் தற்போது செல்லும் வழி குறுகலாக உள்ளது. வழி துவங்கும் இடத்தின்முன்புறம் உள்ள 2 கடைகள் முறையாக கட்டப்படவில்லை.

பள்ளி கட்டிடங்கள் சரியான முறையில் சீரமைக்கப்படவில்லை. மழைக்காலத்தை கருதி ஊராட்சிகளில் உள்ள ஓடைகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்துள்ளது.

இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமளா (நிர்வாகம்), வட்டார கல்வி அலுவலர் மோகன், பொறியாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உட்பட பல்வேறு துறை அலுவலர்களும்கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) காந்திமதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்