அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டா்.

Update: 2022-07-22 19:25 GMT

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் மகேஷ்வரி சண்முகநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் விஜயபுரம், கொடிவயல் ஊராட்சிக்குட்பட்ட 16-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் சவுந்தர்ராஜன் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் நூறு நாள் வேலை திட்டம் பற்றி குறிப்பிட்ட சில விவரங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேட்டு உள்ளார். மேலும் இதுதொடர்பாக நேற்று நடந்த கூட்டத்தில் பதில் கேட்டுள்ளார். அதற்கு அலுவலர்கள் பதில் கூறாமல் இருந்துள்ளனர். இதையடுத்து கூட்டம் முடிந்து அனைத்து கவுன்சிலர்களும் வெளியே சென்று விட்டனர். 16-வது வார்டு கவுன்சிலர் தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் வரையில் போராட்டத்தில் ஈடுபடுவேன் எனக்கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமங்கள்) சிங்காரவடிவேல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலரிடம் பேச்சு வார்த்தை நடத்தி 2 வாரங்களில் பதில் கிடைக்கும் என உறுதி அளித்தார். இதையடுத்து தனது போராட்டத்தை கைவிட்டு கவுன்சிலர் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்