இப்படி இருந்தால் எப்படி தான் இந்த வீதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியும். சமீபத்தில் பெய்த மழைநீருடன், அப்பகுதியில் உள்ள சாக்கடை நீரும் சேர்ந்து இப்படி குளம் போல வீதியை ஆக்கிரமித்து உள்ளது. மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள மஸ்தான்பட்டி குடியிருப்பு பகுதியில் தான் இந்த நிலைமை. இப்படி கழிவுநீர் பல நாட்களாக தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்த கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?