கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
கள்ளக்குறிச்சியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி வாரச்சந்தை நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கச்சிராயப்பாளையம், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 60 விவசாயிகள் 300 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் எல்.ஆர்.ஏ.ரகம் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 269-க்கும், குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 369-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்து 555-க்கும், குறைந்தபட்சமாக ரூ.3 ஆயிரத்து 538-க்கும் விற்பனையானது. இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், சேலம், புஞ்சை புளியம்பட்டி, அன்னூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர். நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ.10 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானதாக வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் தெரிவித்துள்ளார்.