எடப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்ரூ.33 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

Update: 2023-08-04 20:13 GMT

எடப்பாடி 

எடப்பாடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனைக்கான பொது ஏலம் நேற்று நடந்தது. ஏலத்தில் ஈரோடு, கோவை, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். சுமார் 1,130 மூட்டை பருத்தியானது 32 லட்சத்து 97 ஆயிரத்து 383 ரூபாய்க்கு விற்பனையானது. நாள் முழுவதும் நடந்த பருத்தி ஏலத்தில் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 599 முதல் அதிகபட்சமாக ரூ.7,689 வரை விற்பனையானது. அனைத்து ரக பருத்திகளுக்கும் கடந்த வாரத்தை விட குவிண்டால் ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.80 வரை கூடுதல் விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்