சப்பாத்தி பூச்சி தாக்கப்பட்ட பருத்தி செடிகளை வேளாண் அதிகாரிகள் ஆய்வு

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சப்பாத்தி பூச்சி தாக்கப்பட்ட பருத்தி செடிகளை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Update: 2023-06-12 18:45 GMT

திருக்கடையூர்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சப்பாத்தி பூச்சி தாக்கப்பட்ட பருத்தி செடிகளை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பருத்தி சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட திருக்கடையூர், ஆக்கூர், காலகஸ்திநாதபுரம், டீ.மணல்மேடு, நட்சத்திரமாலை, காடுவெட்டி, நடுவலூர், கண்ணங்குடி, கிள்ளியூர், மாத்தூர், அன்னப்பன்பேட்டை, பிள்ளை பெருமாநல்லூர், வளையல் சோழகன், கிடங்கல், மாமாகுடி, காலம நல்லூர், உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு பருத்தியின் விலை அதிகரித்து இருந்ததால் இந்த ஆண்டும் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் மும்முரம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது பருத்தி செடியில் பூப்பூத்து காய் வெடிக்கும் நிலையில் உள்ளது.

ஆய்வு

இந்த நிலையில் தற்போது பருத்தி செடியில் சப்பாத்தி பூச்சிகள், பருத்தி காய் புழுக்கள், அசுவினி பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. மேலும் பருத்தியில் அதிக அளவில் சப்பை கொட்டத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் நேற்று முன்தினம் வெளியானது.

இதன் எதிரொலியாக வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் அறிவுறுத்தலின்படி வேளாண்மை உதவி அலுவலர்கள் ஜெயக்குமார், மகாதேவன் ஆகியோர் காலகஸ்திநாதபுரத்தில் உள்ள பருத்தி செடியில் சப்பாத்தி பூச்சி தாக்கியுள்ள வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்