காட்டன் சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் மனு
காட்டன் சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் மனு
திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ச.பிரபு தலைமையில் நகர மன்ற உறுப்பினர் இ.பரத் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் கூலி தொழிலாளர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒரு நம்பர் காட்டன் சூதாட்டம் கொடி கட்டி பறக்கிறது. ஏழை கூலி தொழிலாளர்களின் ஆசையை தூண்டி அவர்களிடம் ஒரு கும்பல் சட்ட விரோதமாக பணம் பறித்து வருகிறது. இதனால் எண்ணற்ற கூலி தொழிலாளர்கள் குடும்பம் தீராத துயரத்திற்கு ஆளாகியுள்ளார்கள். எனவே உடனடியாக காட்டன் சூதாட்டத்தை தடுத்து நிறுத்தி, அதை நடத்துபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.