கொங்கணாபுரத்தில் ரூ.55 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரத்தில் ரூ.55 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.

Update: 2022-06-04 21:12 GMT

எடப்பாடி,

கொங்கணாபுரத்தில் இயங்கிவரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் 1,550 பருத்தி மூட்டைகள் 400 லாட்டுகளாக வைக்கப்பட்டு ரூ.55 லட்சத்துக்கு ஏலம் போனது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்று (100 கிேலா) ரூ.9 ஆயிரத்து 369 முதல் அதிகபட்சமாக ரூ.11 ஆயிரத்து 440 வரையும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்று ரூ.8 ஆயிரத்து 800 முதல் ரூ.12 ஆயிரத்து 109 வரை ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்