உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
பனமரத்துப்பட்டி
சேலம் அருகே உத்தமசோழபுரம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம் வேளாண்மை துணை இயக்குனர் கண்ணன் தலைமையில் நடந்தது. சேலம் நாமக்கல் மாவட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் 66 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மறைமுக ஏலத்தில் கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் சுரபி ரகம் 40 மூட்டையும், பி.டி. ரகம் 26 மூட்டையும் வரத்து வந்திருந்தது. சுரபி ரக பருத்தி குவிண்டாலுக்கு அதிகபட்ச விலையாக ரூ.9,300-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.8.300-க்கும் விற்பனையானது. இதே போல் பி.டி. ரக பருத்தி அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ.8,700-க்கும் குறைந்தபட்சம் ரூ.8,100-க்கும் விற்பனையானது. மொத்தம் 2½ டன் கிலோ பருத்தி ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்திற்கு விற்பனையானது.